தலிபான் கமாண்டர் சுட்டுக்கொலை

பெசாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் கடந்தாண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 சீக்கியர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் இஸ்லாம், மொகிபுல்லா ஆகியோர் மூளையாக செயல்பட்டனர். இந்நிலையில், குவாசி அருகே வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிபபடையில் பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், தலிபான் கமாண்டர் இஸ்லாம், மொகிபுல்லா உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: