வாடகைக்கு வீடு எடுத்து கடத்தல் : கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது

சென்னை: மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த 3 பேரை, அங்குள்ள போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர், தங்களுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தனர்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் புனே போலீசார், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பாளேஸ்வரம் பகுதிக்கு வந்தனர். அங்கு ஊத்துக்கோட்டை போலீசாரின் உதவியுடன், ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு, 2000, 500, 200, 50 ஆகிய கள்ளநோட்டுகள் அச்சடிப்பது தெரியவந்தது.

பின்னர் அங்கிருந்த பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (44)  என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1.5 லட்சம் உண்மையான நோட்டுகளும், 90 ஆயிரம் கள்ளநோட்டுகளையும், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம், கட்டிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், வெங்கடேசனை, ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புனேவுக்கு கொண்டு சென்றனர்.போலீசாரின் விசாரணையில், பெரியபாளையம் அருகே பாளேஸ்வரம் பகுதியில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல், டிரைவர்கள் தங்குவதாக கூறி சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளரிடம் வீடு வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: