சித்தராமையா மற்றும் அமைச்சர் டி.கே. சிவக்குமார் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரிதானது

டெல்லி: கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநிலத்தில் முக்கிய அமைச்சர் டி.கே. சிவக்குமார் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரிதானதே, அங்கு பிரச்னை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன் காங் - மஜத கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி பதவி ஏற்று கொண்டார். சில நாட்களுக்கு முன்னர், அமைச்சரவையில் காலியாக உள்ள 6 இடங்கள் நிரப்பப்பட்டது. இதற்கு பிறகே பிரச்னை ஏற்பட்டு உள்ளது. அமைச்சரவை விரிவாக்க திட்டத்தை லோக்சபா தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என மத சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் அறிவுறுத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளுக்குள்ளேயே நெருக்கடி இருந்தது. துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் வசம் இருந்த உள்துறையை பறித்த சித்தராமையா, அதனை தனது நம்பிக்கைக்குரியவரான பாட்டீலுக்கு கிடைக்க உதவினார். மாநில காங்கிரசில் முக்கிய நபரான அமைச்சர் சிவக்குமாரிடமிருந்து மருத்துவ கல்வியை பறிக்க வேண்டும் என மேலிட தலைவர்களிடம் சித்தராமையா வலியுறுத்தியதுடன், மற்றொரு அமைச்சரான ரமேஷ் ஜர்கிஹோலியை நீக்கிவிட்டு, அவரது சகோதரர் சதீஷ் ஜர்கிஹோலியை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு நெருக்கமானவரான சிவக்குமாருக்கும் ரமேஷ் ஜர்கிஹோலியுடன் ஏற்கனவே மோதல் இருந்து உள்ளது. அவரும், சதீஷ் ஜர்கிஹோலியை அமைச்சராக ஒப்பு கொண்ட நிலையில், குமாரசாமி அரசை கவிழ்க்க தான் ரமேஷ் ஜர்கிஹோலியை நீக்க சித்தராமையா ஒப்பு கொண்டதை உணர்ந்தார். ஏனென்றால், ரமேஷ் ஜர்கிஹோலி, சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

சித்தராமையா திட்டம்

காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கவும், தனது அரசியல் எதிரியான குமாரசாமியை முதல்வராக்க வேண்டும் என ராகுல் கட்டாயப்படுத்தியதால், சித்தராமையா கடந்த சில நாட்களாக வருத்தத்தில் இருந்தார். ம.பி., ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர், சித்தராமையா, குமாரசாமி அரசால் காங்கிரசிற்கு பலன் இல்லை. மதசார்பற்ற ஜனதா தளத்தை விட காங்கிரஸ் வலிமையாக உள்ளது. லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தால், காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும். குமாரசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று, சட்டசபை தேர்தலை சந்திப்போம் என ராகுலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அரசியலில் இளையவரான குமாரசாமியுடன் கூட்டணி வைப்பதை சித்தராமையாவின் ஆதரவாளர்களும் விரும்பவில்லை. அமைச்சரவை விரிவாக்கமும், பல காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால், கோபத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகேந்திரா மற்றும் எம்எல்ஏக்கள் பீமா நாயக், காம்ப்லி கணேஷ், ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கவுடா மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோர் மும்பை சென்று தங்கியுள்ளனர். அவர்கள் பாஜ.,வுடன் பேசவும் தயாராக உள்ளனர். மஹாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தான் இவர்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தங்களது கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளது காங்கிரசுக்கும் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: