கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி

நைரோபி: கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகி உள்ளனர். கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர்.

விடிய விடிய நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலையில் ஓட்டலின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி ஓட்டலுக்குள் இரண்ட அல்லது மூன்று பயங்கரவாதிகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்படத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: