டிஜிபிக்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: மாநில அரசு தங்கள் விருப்பப்படி டிஜிபிக்களை நியமிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்றது போல் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துகின்றன. எனவே இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டுமென பிரகாஷ் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  டிஜிபிக்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும்.

யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்டப்பவர்களில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, மாநில டிஜிபிக்களை அந்தந்த மாநில அரசே நியமிக்க அனுமதி கோரி கேரளா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு தங்கள் இஷ்டத்துக்கு டிஜிபிக்களை நியமிக்க முடியாது என உத்தரவிட்டு 5 மாநிலங்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: