ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

அடிலெய்டு : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடிலெய்டு 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. அந்த அணியில் ஷான் மார்ஸ் 131 (123) ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மேக்ஸ்வெல் 48 (37), மார்கஸ் 29 (36), பீட்டர் 20 (22) மற்றும் உஸ்மான் 21 (23) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 4 விக்கெட்களையும், முகமது சமி 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.

Advertising
Advertising

இதனையடுத்து 299 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 112 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் அடித்து வெற்றிக்குவித்திட்டார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தனது 39-வது சதத்தை அடித்துள்ளார். 3 போட்டிகள் தொடரில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம் மேல்போர்னில் ஜன.18-ம் தேதி நடைபெறவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: