ஆசியப் பங்குச் சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டதால் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வணிகம் ஏற்றம்

டெல்லி: ஆசியப் பங்குச்சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டதால் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் வணிகம் ஏற்றமடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் நண்பகல் வாக்கில் 332புள்ளிகள் உயர்ந்து 36ஆயிரத்து 185ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 98புள்ளிகள் உயர்ந்து பத்தாயிரத்து 836ஆக இருந்தது. ஆசியப் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டதால் இந்தியப் பங்குச்சந்தைகளும் ஏற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது.

எஸ்பேங்க், ரிலையன்ஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஆசியன் பெயின்ட்ஸ், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, டிசிஎஸ் ஆகியவற்றின் பங்குவிலை 2 விழுக்காடு அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நண்பகல் வாக்கில் 8காசுகள் சரிந்து 71 ரூபாய் ஒரு காசுகளாக இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: