ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஷான் மார்ஷ் சதம் கடந்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது நீக்கப்பட்டு முகமது சிராஜ் அறிமுக வாய்ப்பு பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. புவனேஷ்வர் வேகத்தில் பின்ச் 6 ரன்னிர் அவுட்டானார். அலெக்ஸ் கேரி 18 ரன்கள் எடுத்தார். கவாஜா 21 ரனில் ஆட்டம் இழந்தார்.

ஜடேஜா சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் சிக்கினார். இருப்பினும், ஷான் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷமி பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் 29 ரன்னில் ஆட்டம் இழந்தார். அபாரமாக செயல்பட்ட மார்ஷ் ஒரு நாள் அரங்கில் 7வது சதம் எட்டினார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளிக்க ஸ்கோர் உயர்ந்தது. 6வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தபோது புவனேஷ்வர் பந்தில் மேக்ஸ்வெல் 48.-ல் சிக்கினார். ஷான் மார்ஷ் 131 ரன்களில் ஆட்டம் இழந்தார். ரிச்சர்ட்சன் 2, சிடில் 0 சொதப்ப, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. லியான் 12, பெஹ்ரன்டர்ப் 1 அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவுனேஷ்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: