தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜ அமைச்சர் 18-ம் தேதி தமிழகம் வருகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய பாஜ அமைச்சர் பியூஸ் கோயல் வருகிற 18ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் பிப்ரவரியில் அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும் என்கிற பேச்சுவார்த்தையை பல்வேறு கட்சிகள் தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் பாஜ கட்சியுடன் பழைய நண்பர்கள் கூட்டணி சேர வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது அதிமுக கட்சியை குறிவைத்தே மோடி கூறியதாக கருதப்படுகிறது. அதனால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜ இடையேதான் கூட்டணி அமையும் என்று உறுதியாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக எம்பி தம்பிதுரை இதை தொடர்ந்து மறுத்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.  

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை பாஜ வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார். அப்போது, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: