3வது டெஸ்டிலும் அபார வெற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்டில், 107 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 262 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 77 ரன் முன்னிலையுடன்  2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 303 ரன் குவித்தது. அம்லா 71, டி காக் 129 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 381 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 104  ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் ஆசாத் ஷபிக் - பாபர் ஆஸம் இருவரும் 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்  எடுத்திருந்தது. ஆசாத் 48 ரன், பாபர் 17 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

பாபர் மேற்கொண்டு 4 ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் சர்பராஸ் அகமது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆசாத் 65 ரன் எடுத்து வெளியேற, பாஹீம் அஷர்ப் 15, முகமது ஆமிர் 4, ஹசன் அலி  22 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் அணிவகுத்தனர். முகமது அப்பாஸ் 9 ரன் எடுத்து ரன் அவுட்டாக, பாகிஸ்தான் 65.4 ஓவரில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷதாப் கான் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஒலிவியர், ரபாடா தலா 3, ஸ்டெயின் 2, பிலேண்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். 107 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை  ஒயிட்வாஷ் செய்தது. டி காக் ஆட்ட நாயகன் விருதும், டுவேன் ஒலிவியர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: