ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து...... 10 பேர் பலி

தெஹ்ரான்: ஈரானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தெற்கு பகுதியில் பாத் விமானநிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு போயிங் 707 விமானம் இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியினுள் விழுந்து நொறுங்கியது.

Advertising
Advertising

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: