ஆந்திரா, தெலங்கானாவில் மேலும் 6 அதிநவீன விமான நிலையங்கள்: இலக்கு நிர்ணயித்து பணிகள் துவக்கம்

ஐதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள ஆறு விமான நிலையங்களும் அதிநவீன மயமாகின்றன. இவற்றுடன் மேலும் ஆறு இடங்களில் விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் துவங்கி விட்டன. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஐதராபாத், விசாகப்பட்டிணம், விஜயவாடா ஆகியவை பெரிய விமான நிலையங்களை கொண்டுள்ளன. ராஜமுந்திரி, கடப்பா, திருப்பதி ஆகியவை நவீன மயமாக்கப்பட்டு மீண்டும் இந்தாண்டு  விமானப் போக்குவரத்தை பெரிய அளவில் துவங்க உள்ளன.

  இவற்றுடன் மேலும் ஆறு இடங்களில் விமான நிலையங்களை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு அதற்கான சர்வே நடந்தும் முடிந்து விட்டது.  எந்தெந்த இடங்களில்  அமைக்கலாம் என்பதற்கான சர்வேயில் சாதகமான முடிவுகள்  வந்து விட்டன. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

 இப்போதுள்ள ஆறு விமான நிலையங்கள் வேகமாக அதிநவீன மயமாகி வருகின்றன. சர்வதேச விமான பயணிகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.  இந்த  விமான  நிலையங்களில் மிக நீண்ட விமான ஓடுபாதை, விமான போக்குவரத்து வசதிகள் உட்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த  விமான நிலைங்கள் அதிநவீன மயமாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆறு இடங்களில் சர்வே முடிந்து விட்டது. வாரங்கல், கர்நூல், நெல்லூர், நிசாமாபாத், பிரகாசம் மாவட்டம் தோனகொண்டா, விஜயநகரம்  மாவட்டம் பொப்பிலி, கோத்தகுடம் ஆகிய பகுதிகளில் இந்த ஆறு விமான நிலையங்கள் வருவதற்கான சர்வே நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதால் விமான போக்குவரத்து  ஆணையமும் பச்சைக்கொடி காட்டி விட்டது. ‘சர்வேயில் எல்லா விஷயங்களிலும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், இனி திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்க வேண்டும். மாவட்டங்களை விமான போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டமான  ‘உதான்’ மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: