உலக வங்கி தலைவர் பதவிக்கு டிரம்ப் மகள்

வாஷிங்டன்: உலக வங்கி தலைவர் கிம் திடீரென விலகியதை அடுத்து, அந்த பதவிக்கு போட்டியிடுவோர் பட்டியலில் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் மகள் மற்றும் அவரின் ஆலோசகர் இவாங்கா பெயரும்  இடம்பெற்றுள்ளது.   உலக வங்கி தலைவராக ஜிம் யாங் கிம் மூன்றாண்டையும் தாண்டி இரண்டாவது முறையா பதவியேற்றார். அவர் இப்போது தன் பதவிக்காலம் முடியும் முன்பே திடீரென விலகி விட்டார்.

அவர் பதவிக்கு இதுவரை 5 பேருக்கு  மேல் பரிசீலனையில் உள்ளது. அதில் ஒருவர் டிரம்ப் மகள் இவாங்கா. இவருடன், ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, நிதித்துறை துணை செயலாளர் மால்பாஸ், ஐநா சர்வதேச வளர்ச்சி அமைப்பின்  தலைவர் மார்க் கிரீன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. உலக வங்கி கடந்த 2017ம் ஆண்டு பெண்களுக்காக தனி நிதியை 100 கோடி டாலர் மதிப்பில் அமைத்தது. இந்த நிதியை சவுதி அரேபியா அளித்தது. இந்த விஷயத்தில் இவாங்கா பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தான்  உலக வங்கி தலைவராக இவாங்காவை தேர்வு செய்யலாம் என்று அவர் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: