மூத்த தலைவர் அந்தோணி கருத்து - மோடியை காங்.கால் தனித்து வெல்ல முடியாது

திருவனந்தபுரம்: ‘‘மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தனியாக முயன்றால் வெற்றி பெற முடியாது’’ என்று முன்னாள் மத்திய அமை்ச்சர் அந்தோணி பேசினார்.கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில்,  கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான அந்ேதாணி பேசியதாவது:

என்ன விலை கொடுத்தாலும், ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மோடியின் ஆட்சிக்கு முடிவுகட்ட காங்கிரஸ் முயற்சிக்கும். இதற்காக எங்களுடன் ஒத்துப்போகும் அனைவருடனும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறது. தற்போது, குருஷேத்திர போர் நடக்க உள்ளது. இந்த போரில் இந்தியாவின் தலை எழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது. அதில் காங்கிரசிற்கு தவறு ஏற்பட்டால் அரசியல் அமைப்பு சட்டத்தையே தகர்த்து எறியவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். மீண்டும் ஒரு முறை பா.ஜ.வுக்கு ஆட்சி கிடைத்தால், அவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள். காங்கிரஸ் தனியாக முயற்சித்தால் இந்த ேபாராட்டத்தில் வெற்றி பெற முடியாது. மோடியை தோற்க்கடிக்கவும் முடியாது. பா.ஜ.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க அனைத்து மாநிலங்களிலும் முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாகை புனித அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்