தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தேசிய துணை தலைவர் பேட்டி

சென்னை: தமிழக அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. தேசிய துணை தலைவர் கூறியுள்ளார்.எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி சென்னையில் அளித்த பேட்டி:முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் என பல கமிஷன்கள் அரசுக்கு பரிந்துரையை அளித்துள்ளன.  ஆனால் அந்த அறிக்கையின்  பரிந்துரைகளை கூட கடந்த ஆட்சியின் போது நிறைவேற்ற பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் உயர் வகுப்பினருக்கு பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜ அரசு அளித்துள்ளது. இது முற்றிலும்  தேர்தல் ஆதாயத்திற்கானது.ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை உத்தரவு என்பது வலுவில்லாத ஒன்று. அரசாணையை விட கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும் என பலர்  வலியுறுத்தினர்.

ஆனால், அதனை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்தது. அதன் விளைவு தான் இன்றைக்கு ஆலையை திறக்க நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன. எனவே தமிழக அரசு இனியும் மெத்தனம்  காட்டாமல் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும் வகையில் கொள்கை தீர்மானத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு கூறினார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்  ஏ.கே.அப்துல் கரீம், மாநில பேச்சாளர் செய்யது  இப்ராஹிம் உடன் இருந்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மாநகராட்சியாக மாறும் ஆவடி: தமிழ்நாடு அரசு திட்டம்