முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 288 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து நடந்த பரபரப்பான டெஸ்ட் தொடரில் 2-1 என அபாரமாக வென்ற இந்தியா, ஆஸி. மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.50க்கு தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், கேரே களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றி உள்ளார். அதன்பின்னர் கேரே-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடியது. ஆட்ட முடிவில்,
50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. இதனையடுத்து 289 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய...