விமானம் புறப்பட தாமதம் கோவை ஏர்போர்ட்டில் பயணிகள் போராட்டம்

கோவை: கோவையில் இருந்து டெல்லிக்கு தினமும் இரவு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் விமானத்தில் செல்வதற்காக 126 பயணிகள் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் வந்தது. பின் பைலட் தனக்கு பணி நேரம் முடிந்ததாக கூறி  ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.  இதனால் டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். விமான நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமானம் கிளம்ப தாமதம் ஆனதாகதெரிவித்தனர். இதனால் 6 மணி நேரமாக பயணிகள் தவிப்பிற்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு வந்த விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோவை விமான நிலையம் விரிவாக்கம்...