அரசு டாக்டர்கள் கோரிக்ைக நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை றிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: அரசு டாக்டர்கள் கோரிக்கை நிறைவேற்றம் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை, கோமதிபுரத்தை சேர்ந்த முகம்மது யூனுஸ் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்ட காலத்தில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்வதில்லை. கிராமப்புறங்களுக்கு பணிக்கு போவதில்லை என கூறியுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவர்.  கஜா புயல் நிவாரணப்பணிகள் பாதிக்கும். எனவே, அரசு மருத்துவர்கள் எந்தவிதத்திலும் ஸ்டிரைக்கில் பங்கேற்கவும், ஈடுபடவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கடந்த அக்.18ல் டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு தரப்பில் குழு கூடி விவாதித்தது. இதேபோல் சுகாதாரப்பணிகள் இயக்குநரும் அரசுக்கு ஓர் அறிக்கை அளித்துள்ளார். இந்த பரிந்துரைகளுக்கு பல துறைகளின் ஒப்புதலும் பெற வேண்டியுள்ளது. இவற்றின் மீது முடிவெடுக்க பிப்.15 வரை அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் அக்.18ல் நடந்த கூட்டத்தின் அறிக்கை அடிப்படையில் தகுந்த முடிவெடுத்து அதன் விபரத்தை ஜன.27க்குள் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஜன.28க்கு தள்ளி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED டெல்லியில் நாளை அரசு மருத்துவர்கள்...