கோத்தகிரி அருகே குட்டிகளுடன் உலா வரும் கரடி

குன்னூர்: நீலகிரி  மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைக்காட்டி பகுதியில் கரடி  ஒன்று இரண்டு குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம் மாலை இங்குள்ள மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி, குட்டிகள் திடீரென சத்தமிட துவங்கின. தகவல் கிடைத்து வனத்துறையினர் வருவதற்குள் வனப்பகுதிக்குள்  கரடிகள் சென்றுவிட்டன. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நீலகிரியில் கரடி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்