திருச்சி மாவட்டத்துக்கு இல்லாத சுற்றுலா அலுவலர் இருப்பதாக அமைச்சர் தகவல்: அதிகாரிகள் அதிர்ச்சி

திருச்சி: சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் சொந்த மாவட்டமான திருச்சியில் சுற்றுலா அலுவலர் இல்லை. ஆனால், அலுவலர் உள்ளார் என்று கூறியதால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, `கஜா புயலால் பாதித்த பகுதிகளில் சுற்றுலா பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். அதற்கு, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் சுற்றுலா அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதே?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘கஜா புயலால் பாதித்த பகுதிகளில் சுற்றுலா பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட அந்தந்த மாவட்ட அலுவலர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா அலுவலர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா அலுவலர் உள்ளார்’ என்றார்.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா அலுவலர் பணியிடம் காலியாகி பல மாதங்கள் ஆகிறது. நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவக்குமார் தான் கூடுதல் பொறுப்பாக திருச்சியை கவனித்து வருகிறார். தனது சொந்த மாவட்டத்திலேயே சுற்றுலா அலுவலர் இருக்கிறாரா? இல்லையா? எனத்தெரியாமல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவறான தகவலை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது அதிகாரிகள், கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குடிநீர் தட்டுப்பாடு, வளர்ச்சி பணிகள்...