கரும்பு நிலுவைத்தொகை கேட்டு மண்டை ஓடுடன் விவசாயிகள் போராட்டம்

விருத்தாசலம்: கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் நேற்று 5-வது நாளாக மண்டை ஓடு, எலும்புகளுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கரும்பு நிலுவைத்தொகை கேட்டு விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த 4 நாட்களாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நேற்று முன்தினம் 4ம் நாளாக பாடை கட்டும் போராட்டம் நடந்தது. இதில் பிணம் போல் ஒருவரை பூக்களால் அலங்கரித்து ஒரு நாற்காலியில் அமரவைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதற்கிடையே நேற்று காலை 5வது நாள் போராட்டம் நடந்தது. இதில் மண்டை ஓடுகள், எலும்புகளை தரையில் பரப்பி வைத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சார் ஆட்சியர் பிரசாந்த், ஏஎஸ்பி தீபா சத்யன் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகிகள் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்