எம்ஜிஆரின் 102வது பிறந்தநாளையொட்டி 3 நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம்: இபிஎஸ், ஓபிஎஸ் உத்தரவு

சென்னை: எம்ஜிஆரின் 102வது பிறந்தநாளையொட்டி 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த அதிமுகவினருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நல பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கருணாநிதி பிறந்தநாள் கூட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்