22ம் தேதி முதல் போராட்டம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை: நீதிமன்றத்தில் அரசு கால அவகாசம் கேட்டதால், ஜாக்டோ-ஜியோ 22ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் போராட்ட
த்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒருநபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு ஏதும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதை ெதாடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 22ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களும் போராட்டத்தை ஒத்தி வைத்திருந்தனர், அந்த ஆசிரியர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனால், போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள்...