ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை தம்பிதுரை, துணை முதல்வர், அமைச்சர் ஆஜராக ஆணையம் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த டிசம்பர் 18ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் 3முறை அவர் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தரப்பில், விசாரணையை வேறொரு நாளில் தள்ளி வைக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஆணையத்தில் கடிதம் அளித்திருந்தார். அதன்பேரில் விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வரும் 21ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 22ம் தேதி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் 23ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்று பேரும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED முதல்வர், துணை முதல்வருடன் திடீர்...