பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கு தக்கல் திட்டம்: 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட தேதியில், விண்ணப்பிக்க தவறிய தனித்  தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி (தக்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறையின் சேவை மையத்துக்கு மாணவர்கள் நேரில் சென்று, 21 மற்றும் 22ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள் (எச் வகை) தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, பிளஸ் 1 தேர்வை நேரடித் தனித் தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும் மார்ச் 2019ல் நடக்க உள்ள பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணத்துடன் தக்கல் கட்டணமாக 1000 சேர்த்து செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை பதிவு ரசீதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேற்கண்ட தக்கல் முறையில் தேர்வு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஹால்டிக்கெட் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யும் நாள் பின்னர் குறிப்பிடப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர்...