பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் கொண்டாட சிறப்பாக பணியாற்ற வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் அறிவுரை

சென்னை: பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் அமைதியுடனும் பொங்கல் கொண்டாட போலீசார் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பொங்கல் விழாவில் டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் போலீசாருக்கு  அறிவுரை வழங்கி உள்ளார். சென்னை ஆவடி வைஷ்ணவி நகரில் உள்ள 5ம் பட்டாலியன் மைதானத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பில் 3ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக டிஜிபி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் புதுப்பானையில் அரிசியிட்டு டி.ஜி.பி.ராஜேந்திரன் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மைதானத்தில் அனைவரும் பொங்கலிட்டு கொண்டாடினர். பின்னர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமத்தையும் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் மற்றும் தானிய வகைகளை டிஜிபி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

காவலர்களுக்கிடையே நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, சறுக்கு மரம் ஏறும் போட்டி, கோலப்போட்டி, உறியடி போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற போலீசாருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் பேசுகையில், ‘‘பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கடுமையாக பணியாற்றும் நாம், அனைவரது இல்லத்திலும் விளக்கு எரிய வேண்டுமானால் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். பொதுமக்கள் பல்வேறு விழாக்களை கொண்டாட நாம் நமது குடும்பங்களை  விட்டு பண்டிகைகளை கொண்டாடாமல் பணி செய்வதை பெருமையாக கருத வேண்டும். காவலர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களிடையே உள்ள மன அழுத்தத்தை போக்க அரசு ஏற்பாட்டில் பிரபல மனநல ஆராய்ச்சி மையத்தின் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது அதன் மூலம் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகிறது’’ என்றார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக...