அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: சென்னையில் அமமுகவை சேர்ந்தவர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சென்னை கிழக்கு மாவட்டம், டி.டி.வி.தினகரனின், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த சென்னை வடக்கு (தெற்கு) மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் ஆர்.கார்த்திக் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., துறைமுகம் மேற்கு பகுதிச் செயலாளர் எஸ்.முரளி, 54வது வட்ட செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், கே.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆத்தூரில் திமுக சார்பில்...