சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது: விண்ணப்பிக்க 28ம்தேதி கடைசி

சென்னை: பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு 2018-19ம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  2019ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கு, தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறையில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகளுடன் உரிய விண்ணப்பங்கள் வருகிற 28ம் தேதிக்குள் “மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகம், சிங்கார வேலனார் மாளிகை, 8வது தளம், சென்னை-1. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044-25264568” என்ற முகவரியை அணுகலாம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழக, ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க...