ஆசிய கோப்பை கால்பந்து - இந்தியாவுக்கு நெருக்கடி

துபாய்: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கோள்விக்குறியாகி உள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, யு.ஏ.இ., பஹ்ரைன், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. பஹ்ரைன் - யு.ஏ.இ மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிப் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்க, நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் தாய்லாந்து 1-0 என  பஹ்ரைனை தோற்கடித்தது. யு.ஏ.இ அணியுடன் மோதிய இந்தியா  0-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

யு.ஏ.இ (4 புள்ளி) முதலிடத்தில் இருக்க, இந்தியா, தாய்லாந்து (தலா 3 புள்ளி), பஹ்ரைன் (1) அடுத்த இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஹ்ரைன் அணியை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED முறையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு தலைவலி