46-வது பிறந்தநாள் டிராவிட் உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேற்று தனது 46வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். டெஸ்ட் போட்டிகளில் தனது உறுதியான பேட்டிங்கால் ‘இந்தியப் பெருஞ்சுவர்’ என வர்ணிக்கப்பட்ட டிராவிட், 164 டெஸ்டில் 13,288 ரன் (அதிகம் 270, சராசரி 52.3, சதம் 36, அரைசதம் 63) விளாசியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது பயிற்சியின் கீழ் இந்திய யு-19 அணி கடந்த ஆண்டு இளைஞர் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. பெருமை மிகு ஐசிசி பிரபலமாகவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள டிராவிட்டுக்கு பல்வேறு துறை சார்ந்த நட்சத்திரங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்ற மாணவர்கள்