சர்ச்சை பேட்டியால் ஹர்திக், ராகுல் சஸ்பெண்ட்

இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இருவரும் சமீபத்தில் பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்குமாறு இரு வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இருவரும் நீக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிட்னி போட்டிக்கான அணியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு...