யோஷிடா ஓய்வு

முன்னாள்  உலக சாம்பியன் சவோரி யோஷிடா(36) மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஒலிம்பிக் ேபாட்டியில் 55கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில்   2004, 2008, 2012ம் ஆண்டுகளில்  தங்கமும், 2016ம் ஆண்டு வெள்ளியும் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4முறை தங்கம் வென்றுள்ளார். ே மலும் 2002ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ந்து 13முறை உலக சாம்பியன் பட்டம்  வென்றுள்ளார். அதிலும் 2005 முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ந்து 11 முறை உலக சாம்பியன் வென்ற சாதனையாளர் யோஷிடா. அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தலைவணங்கி,  கண்ணீருடன் தனது முடிவை அறிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஓய்வு போலீஸ்காரரின் நிலத்தை ஆக்கிரமித்ததாக விவசாயி மீது வழக்கு