11வது சென்னை ஓப்பன் ஜன.18 முதல் சர்வதேச செஸ் போட்டிகள்

சென்னை: சென்னையில் இம்மாதம் 18ம் தேதி முதல் 11வது சென்னை ஓப்பன் சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இம்மாதம் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.தமிழ்நாடு சதுரங்க கழகமுமும், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பும் இணைந்து 11வது சென்னை ஓப்பன் சர்வதேச செஸ் போட்டிகளை நடத்த உள்ளன. மகாலிங்கம் நினைவுக் கோப்பைக்கான இந்தப் போட்டிகள் இம்மாதம் 18ம்  தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளன.

போட்டியில் இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்பும் செஸ் வீரர்கள், வீராங்கனைகள் இம்மாதம் 15ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு  செய்ய வேண்டும். பதிவு செய்யும் முறை, பங்கேற்பு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை 044-25384477 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது என்ற tnchesstmt@gmail.com மின்னஞ்சல் மூலமாக தொடர்புக் கொண்டு  அறியலாம். போட்டியில் வெற்றிப் பெறுபவருக்கு முதல் பரிசாக 3 லட்சமும், 2வது பரிசாக 2 லட்ச ரூபாய் என மொத்தம் 15 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னை ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் முகுந்த்