பிக் பாஷ் டி20 லீக் : மெல்போர்னை வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 தொடரில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முதலில் பந்துவீசியது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன் குவித்தது. குல்பிஸ் 37, பென் டங்க் 62 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), செப் கோட்ச் 18 ரன் எடுத்தனர். பெர்த் பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4, வில்லி, உஸ்மான் காதிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 17.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து வென்றது. பேங்க்ராப்ட் 59 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கிளிங்கர் 29, கேப்டன் ஆஷ்டன் டர்னர் 43 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். பெர்த் அணி 2 புள்ளிகள் பெற்றது. பட்டியலில் மெல்போர்ன் அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பெர்த் அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்...