அதிகரிக்கும் ‘கே’ திருமணங்கள்

ஒரே இடத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் ‘மெகா திருமண’ நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடப்பது வழக்கமானது. ஆனால் பிரேசிலின் சா பாலோ நகரில் ஓரினச் சேர்க்கை ஜோடிகள் நடத்திய மெகா  திருமண விழா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இடத்தில் பல ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். இது அந்நாட்டு அரசுக்கும் கவலை அளித்துள்ளது. திருமணம் செய்து கொண்ட ஒரு ஓரினச்சேர்க்கை  ஜோடியை நண்பர்கள் பூ தூவி வரவேற்கின்றனர்.

ஹைடெக் காய்கறி சப்ளை:
காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக ஆளில்லா வாகன வசதி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆர்1’ என்ற டிரைவர் இல்லாத தானியங்கி வாகனம்  கடந்த ஆகஸ்டில் சோதனையை தொடங்கியது. சோதனை வெற்றிகரமாக நடந்ததால் தற்போது மளிகை பொருட்களை ‘ஆர்1’ வெற்றிகரமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறது.

காங்கோவில் இப்படி:
காங்கோவின் மடாடி நகரில், மினி லாரியில் ஏற்ற வேண்டிய அளவுக்கான சரக்குகளை, தனது ஓட்டை காரில் ஏற்றிச் செல்ல ஆயத்தமாகிறார் ஒருவர்.

கிறிஸ்துமஸ் கோலாகலம்;
கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கிரீம்லின் நகர வீதிகள் அலங்கார மின்விளக்குளால் ஜொலிக்கிறது.

தில்லு துரை:
சீனாவின் லியோன்னிங்க் மாகாணம், சென்யாங்க் பகுதியில் குளிர்கால பனி கொட்டி வருகிறது. -20 டிகிரி கடும் குளிரில் அனைத்து பகுதிகளிலும் பனி போர்த்தியிருக்கிறது. கிட்டத்தட்ட முழுவதும் உறைந்த நதியின் சிறு  பகுதியில், கடும் குளிர் நீரில் ‘தில்லாக’ ஒருவர் நீச்சல் அடித்து மகிழ்கிறார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஈர்ப்புவிசை இல்லாமல்போனால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!