×

நாகையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அளித்த நிவாரண தொகை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 25,000 வீதம் இழப்பீடு தரவேண்டும் என்பது அவர்களுது கோரிக்கையாக உள்ளது. மேலும் புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் கிராமம் கஜா புயலால் சூறையாடப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அரசின் நிவாரண கிடைக்கவில்லை. இந்த நிலையில் புயல் சேத விவரங்களை முறையாக கணக்கெடுத்து, நிவாரணத்தை வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், நிவாரணங்களை உடனடியாக வழங்கக்கோரியும் உப்பூரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagapattinam ,Marxist Communist Party ,District , Nagapattinam, the disaster district,the CPI (M,demonstrated
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்