×

தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  சென்னையில் அனுமதியின்றி பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒரே அளவுகோலை பின்பற்றுகின்றன.

நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் மதிப்பதில்லை. செயல்படுத்துவதும் இல்லை. சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படும் என தமிழக அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் எனக்கூறியதுடன், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதித்தது உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BANKING ,BANGALORE ,Chennai High Court , Banner, ban, Chennai High Court, Traffic Ramasamy,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...