×

கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அடுத்த சீசனுக்கு தயாராகி வருகிறது. குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்காவில் தினமும் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளன. மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பழ கண்காட்சி ஆண்டு தோறும் நடக்கிறது.

இதனை காண சுற்றுலா பயணிகள் தமிழகம் முழுக்க இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருவதால் மே மாத சீசனில் குன்னூர் சிம்ஸ் பூங்கா கலைகட்டி காணப்படும். தற்போது, மே மாத சீசனுக்காக பூங்கா தயாராகி வருகிறது.  பனியின் காரணமாக மலர்கள் கருகியதால்  மலர் செடிகளை அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேலும் மலர் செடிகள் அகற்றப்பட்ட இடங்களில் புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coonoor Sims Park , Summer Season, Coonoor, Sims Park
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயாராகிறது