×

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளித்த தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அத்துடன் ஆலை மீண்டும் இயங்க தடையில்லை என்றும், மூன்று வாரத்திற்குள் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பாணை வெளியிடவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் ஆணையிடப்பட்டது.

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சில நிபந்தனைகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்டது. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து பாத்திமா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று அல்லது நாளை விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : plant ,Court of Justice ,Sterlite , HC branch, sterlite plant, National Green Tribunal, Madurai,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...