×

பிரதமர் வேட்பாளராவதில் எனக்கு விருப்பமில்லை : நிதின் கட்கரி பேச்சு

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் விழா ஒன்றில் பேசிய அவர், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு, இஸ்லாமிய மக்கள் ஆதரவாக உள்ளதாக கூறிய நிதின் கட்கரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுதொடர்பாக நீதிபதிகளுக்குதான் முடிவெடுக்க உரிமை உள்ளது என கூறினார். அயோத்தி விவகாரம் என்பது, மதவாதம் மதம் சம்பந்தப்பட்டது கிடையாது என்றும் கடவுள் ராமர் என்பவர் நமது வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்தின் அடையாளம் என்றார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. ராமர் பிறந்த இடமான அயோத்தியிலேயே அவருக்கு கோயில் கட்டவில்லையெனில், வேறு எங்கு அக்கோயிலை கட்டுவது என வினவினார். இவ்விகாரத்தில் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் இதற்கு தீர்வு காணலாம். இல்லையெனில் நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் ராமர் கோயில் கட்டலாம். ஆனால் இவை பரஸ்பரம் சம்மதம் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றார்.

5 மாநில தேர்தல் தோல்வி குறித்து பேசியி நிதின் கட்கரி, தோல்வி என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால், மக்களவைத் தேர்தல் முடிவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பிரதமர் மோடி தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக நான் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை, அதற்கான விருப்பமும் தனக்கு இல்லை என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nitin Gadkari , Ayodhya, Ram Temple, Nitin Gadkari, PM candidate
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை...