வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யாததால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் சென்னையில் 54 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. கஜா மற்றும் பெய்ட்டி புயல்களால் சென்னைக்கு எதிர்பார்த்த அளவிற்கு மழை கிடைக்கவில்லை.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய எரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடியாகும். ஆனால் இந்த ஏரிகளில் இப்போது 1,588 கன அடி தண்ணீரே இருப்பு உள்ளது. இதன் காரணமாக வரும் மார்ச் மாதத்திலிருந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனை சமாளிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: