×

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கருணாநிதி அறக்கட்டளை சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய, நலிந்தோர்க்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த  5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினை கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டு வந்தது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 69 லட்சத்து 90 ஆயிரம். தற்போது 2018, நவம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் தபால் மூலம் வரைவு காசோலையாக நிதி பெற்றவர்கள் விவரம்: கி.முருகன், வடஒத்தவாடைத் தெரு, திருவண்ணாமலை ரூ.25,000, கே.பழனிசாமி, கழுமரம் அஞ்சல், திருக்கோவிலூர், விழுப்புரம் ரூ.25,000, பெ.ஆறுமுகம், வடக்கு காலனி தெரு, சிந்தாமணி, தா.பழூர் ஒன்றியம், அரியலூர் ரூ.25,000, பி.பாப்பாத்தி, வவ்வாக்காடு தோட்டம், இளநர் அஞ்சல், திருச்செங்கோடு, நாமக்கல் ரூ.25,000, சி.ஆறுமுகம், வீரமுடையான் மெயின் ரோடு, முத்துப்பட்டி, மதுரை ரூ.25,000, எம்.தமிழரசன், நரிப்பட்டி கிராமம், கொட்டகுடி ஊராட்சி, போடிநாயக்கனூர், தேனி ரூ.25,000, து.வேலுச்சாமி, கல்லூரணி அஞ்சல், திருப்புவனம், சிவகங்கை ரூ.25,000, கே.செல்வசிவலிங்கம், புதூர், தர்மபுரம் ஊராட்சி, பொழிக்கரை அஞ்சல், கன்னியாகுமரி ரூ.25,000, மொத்தம் ரூ.2 லட்சம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Karunanidhi Foundation , MK Stalin,donated,benefit,Karunanidhi,Foundation
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...