×

தமிழக மக்களின் நலன்களை முதல்வர் புறக்கணிக்கிறார்: கமல் பேட்டி

சென்னை: தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது பிரச்னை, கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியது சரியான செயல்.

அதுபோன்ற அழுத்தங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தொடரவும் வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று கூறியது அவரது கருத்து. அவர் நினைத்தால், கொள்கை முடிவு எடுக்கலாம். ஆனால், தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார். அதில் இதுவும் ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,interview ,Tamil ,Kamal , Chief Minister,ignores,interests,Tamil people, Kamal,interview
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்