×

விளையாட்டுத் துளிகள்

* ஏலம் தொடங்குவதற்கு முன்பாக கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் உட்பட 5 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
* ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சமாக 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இடம் பெறலாம். ஏற்கனவே செலவு செய்ததுபோக மீதம் உள்ள தொகையுடன் கூடுதலாக 2 கோடி செலவழிக்க அனுமதிக்கப்பட்டது. பஞ்சாப் அணி கைவசம் அதிகபட்சமாக 36.2 கோடி இருந்தது.
* பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டீசை சேர்ந்த ஹக் எட்மீட்ஸ் ஏலத்தை நடத்தினார்.
* நேற்று அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற பெருமையை வருண் சக்ரவர்த்தி, ஜெய்தேவ் உனத்காட் (தலா 8.4 கோடி) பகிர்ந்துகொண்டனர்.
* மோகித் ஷர்மாவை 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.
* முகமது ஷமியை 4.8 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்தது.
* ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் 5 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
* விருத்திமான் சாஹா, ஜானி பேர்ஸ்டோ, மார்டின் கப்தில் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
* வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மயரின் அடிப்படை விலை 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 4.2 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Captain Ian Morgan
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...