×

2 வாரங்களுக்கு பிறகு பொள்ளாச்சி சந்தை திறப்பு: மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: கோமாரி பாதிப்பு காரணமாக மூடப்பட்ட பொள்ளாச்சி சந்தை, 2 வாரங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதில், மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்படுகிறது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்கள் மாட்டு சந்தை நடைபெறும். பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வருகின்றனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக, பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டுவந்து விற்பனைசெய்ய தடை விதிக்கப்பட்டது.

 இதனால் மாட்டு சந்தை, 2 வாரமாக செயல்படவில்லை.  இந்நிலையில் இன்று சந்தை மீண்டும் கூடியது. மாடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து குறைந்த அளவிலேயே இருந்தது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் கேரள வியாபாரிகள் வருகை குறைந்தது. அதற்கு பதிலாக உள்ளூர் வியாபாரிகளே அதிகளவில் வந்திருந்தனர். 2 வாரத்திற்கு பிறகு சந்தை மீண்டும் செயல்பட துவங்கியதால் மாடு விற்பனை விறுவிறுப்புடன் இருந்தது.காளை மாடு ரூ.34 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.32 ஆயிரத்திற்கும், கன்றுக் குட்டிகள் ரூ.13 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Market Opening , Pollachi market opening, cow sales
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை