×

அரசு, புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோருக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுற்றறிக்கை வெளியிட உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தங்களை அகற்றிவிடக்கூடாது, நிலத்திற்கான பட்டா எங்களிடம் உள்ளது, இதனால் அப்பகுதியில் இருந்து எங்களை அகற்றி விடக்கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்; இது அரசியல் பிரமுகர்கள் இடம், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதற்கு பட்டாவும்  லஞ்சம் பெற்று கொண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பட்டவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை எழுந்தது. நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் இரு தரப்பு வாதங்களை விசாரித்து; இந்த நிலம் என்பது, ஓடை, புறம்போக்கு நிலம் என்பது தெளிவாக தெரிகிறது.

அரசு நிலங்களை லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுற்றறிக்கை வெளியிட உள்துறை செயலருக்கு உத்தரவிட்டார். மேலும் சுற்றறிக்கையை 4 வாரத்துக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,lands ,High Court , Government Outrage, Occupation, Patta, High Court
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...