×

இந்தியாவில் 5ஜி சேவை சோதனை முயற்சி: ஹூவாவேய் நிறுவனத்திற்கு அழைப்பு

டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவை சோதனை முயற்சிகளில் பங்கேற்க சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவேய்-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை சோதனை முயற்சிகளில் பங்கேற்குமாறு நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொடக்கத்தில் இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு ஹூவாவேய் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஹூவாவேய்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5ஜி சேவை சோதனையில் பங்கேற்குமாறு ஹூவாவேய்க்கு தொலைத்தொடர்புத்துறை செயலர் விடுத்துள்ள அழைப்பில், இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் அதன் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவ தலைமையகத்துடன் ஹூவாவேய் நிறுவனத்திற்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 5ஜி முறைகளில் பங்கேற்க முடியாத வகையில் அந்நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Huawei , India, 5G service, testing, hawaii company, call
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!