×

சென்னையில் ஜனவரி முதல் நவம்பர் வரை 515 பேர் டெங்குவால் பாதிப்பு : உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: தலைநகர் சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. டெங்கு கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித்கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது சென்னையில் ஜனவரி முதல் நவம்பர் மாதங்கள் வரை தலைநகர் சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி கொசுக்ளின் இனப்பெருக்கத்தை தடுக்க மாநகரம் முழுவதும் 587 தெளிப்பான் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் கழிவுகளை கொட்டிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பு கூறியுள்ளது. 


இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சுமார் 4 லட்சம் பேர் சென்னையில் சிகிச்சை பெற்று பயனடைந்ததாகவும் மாநகராட்சி கூறியுள்ளது. முன்னதாக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், தாக்கல் செய்த மனுவில், சென்னையில், கால்வாய்கள் மற்றும் தெருக்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அசுத்த நீரிலும், தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரிலும், கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனேவ டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dengue ,High Court Municipal Corporation , Chennai, Dengue Damage, Corporation, High Court
× RELATED வல்லநாடு ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்