தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் பெய்ட்டி புயல், தொடர்ந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும்.

இதனால் மீனவர்கள் இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். ஆகையால் மழைக்கு வாய்ப்பில்லை. வங்கக்கடலில் 3 நாட்கள் கழித்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வழக்கமான அளவை விட வெப்பம் 4 சதவீதம் குறைவாகவே இருந்தது என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: