2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்கு

பெர்த்: பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஆஸ்திரேலியா 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 43 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 2-வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் பிஞ்ச், ஹாரிஸ் நிதானமான துவக்கம் அளித்தனர். ஷமி வீசிய பந்தில் பிஞ்ச்சின் வலது கை ஆட்காட்டி விரலில் காயம் ஏற்படவே, அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

நேற்று தேனீர் இடைவேளைக்குப் பின் இந்திய பவுலர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர். பூம்ரா பந்தில் ஹாரிஸ் (20), ஷமி பந்து வீச்சில் மார்ஷ் (5), ஹெட் (19), இஷாந்த் சர்மா பந்தில் ஹேண்ட்ஸ்கம்ப் (13) வெளியேற, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இன்று நான்காம் நாள் தொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்தது. உஸ்மான் கவாஜா டெஸ்ட் அரங்கில் தனது 14-வது அரை சதத்தை 156 பந்துகளில் எட்டினார்.

உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறப்பாக பந்து வீசிய ஷமி 6 விக்கெட்களை எடுத்து அசத்தினார். முகமது ஷமி வீசிய 79-வது ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெய்ன் 37 ரன்களில் வெளியேறினார். காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பேட் செய்ய வந்த பிஞ்ச் வந்த முதல்பத்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கவாஜா 72 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய  அடுத்த ஓவரில் கம்மின்ஸ் ஒரு ரன்னில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஹாசில்வுட் இருவரும் அதிரடியாக ஆடி 36 ரன்கள் சேர்ந்தனர். ஸ்டார்க் 14 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி வெற்றி பெற ஆஸ்திரேலியா 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: